திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாசி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் நேற்று மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் கோவிலில் இருந்து கொடிப்பட்டம் பல்லக்கில் புறப்பட்டு, எட்டு வீதிகளிலும் சென்று, மீண்டும் கோவிலை சேர்ந்தது. தொடர்ந்து 11 கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.
அதிகாலை 5.15 மணிக்கு கோவில் கொடிமரத்தில் அசோகன் வல்லவராயர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
17–ந்தேதி, தேரோட்டம்
விழாவில் கோவில் இணை ஆணையர் பாரதி, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், அலுவலர் பிச்சையா, மணியம் நவநீதகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். 10–ம் திருநாளான வருகிற 17–ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

Related Tags :
Next Story