ஆதார் பதிவு செய்தால் மட்டுமே விவசாயிகள் உரம் வாங்க முடியும் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்


ஆதார் பதிவு செய்தால் மட்டுமே விவசாயிகள் உரம் வாங்க முடியும் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2018 2:00 AM IST (Updated: 9 Feb 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ நெல் மற்றும் இறவை காய்கறி சாகுபடி பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ நெல் மற்றும் இறவை காய்கறி சாகுபடி பணி மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வகை உரங்களும், தனியார் மற்றும் தொடக்கக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த உரங்களை விலைக்கு வாங்கும் போது உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனைய எந்திரத்தில், தங்கள் ஆதார் எண் மற்றும் கைரேகைகளை பதிவு செய்தால் மட்டுமே உரம் வாங்க முடியும். கடந்த 1.1.2018 முதல் இந்த நடைமுறை கட்டாயமாக்கபட்டு உள்ளது.

ஆகையால் விவசாயிகள் அனைவரும் உரம் வாங்கும் போது ஆதார் எண் கொண்டு சென்று கைரேகையை பதிவு செய்து அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு உரங்களை வாங்கிப் பயன்படுத்துமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story