உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை மண்டல கலந்தாய்வு கூட்டத்தில் 504 பேர் மனு; அதிகாரிகள் பரிசீலனை
தூத்துக்குடியில் நேற்று நடந்த உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பாக நடைபெற்ற மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டத்தில் 504 பேர் மனுக்கள் கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நேற்று நடந்த உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பாக நடைபெற்ற மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டத்தில் 504 பேர் மனுக்கள் கொடுத்தனர். இதில் 75 மனுக்கள் மீது உடனடியாக பரிசீலிக்கப்பட்டது. மற்ற மனுக்கள் மீது அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக வெளியிடப்பட்ட வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் ஆட்சேபனை– கருத்துக்களை நேரடியாக கேட்பதற்கான மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம், நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மறுவரையறை ஆணையத் தலைவரான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிலும், மாவட்ட அளவிலும் வெளியிடப்பட்டு, அந்த கருத்துருக்களின் மீது அரசியல் கட்சிகள், பொதுமக்களின் ஆட்சேபனை– கருத்துக்கள் தொடர்பான மனுக்கள் கடந்த 12.1.2018 அன்று வரை பெறப்பட்டன. அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள், பொது மக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆட்சேபனை மற்றும் கருத்துக்களை நேரடியாக தெரிவித்தனர். அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டருக்கு மறுவரையறை ஆணையத் தலைவரான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் அறிவுறுத்தினார்.
மனுக்கள்
தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தலைவரிடம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் அனுப்பிய 504 மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதில் 75 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மறுவரையறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டன. மீதமுள்ள 429 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. மேற்படி மனுக்களை பரிசீலனை செய்து ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மறுவரையறை ஆணையத்திற்கு உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டுமென மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில், மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர் பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story