தூத்துக்குடி அருகே தென்னை நார்க்கழிவு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
தூத்துக்குடி அருகே தென்னை நார்க்கழிவு தொழிற்சாலையில் நடந்த பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தூத்துக்குடி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
தென்னை நார்க்கழிவு தொழிற்சாலை
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்து உள்ளது. இங்கு பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தண்டுபத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் கே.பி.கே.குமரனுக்கு சொந்தமான தென்னை நார்க்கழிவு தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தென்னை நார் கழிவுகள் எந்திரம் மூலம் சிறிய கட்டிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் இருந்து நேற்று காலை சுமார் 6 மணி அளவில் திடீரென புகை வெளியேறியது. இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொழிற்சாலை உள்ளே சென்று பார்த்த போது, தென்னை நார் கட்டிகள் செய்வதற்காக எந்திரத்தின் அருகே குவித்து வைக்கப்பட்டு இருந்த தென்னைநார் கழிவுகள் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.
தீவிபத்து
உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) மகாலிங்கமூர்த்தி தலைமையில் சிப்காட் நிலைய தீயணைப்பு அலுவலர் (போக்குவரத்து) ஆ.சண்முகம், தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர்.
தொழிற்சாலையின் பக்கவாட்டில் உள்ள சுவர்களை இடித்து அதன்வழியாக தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி, சிப்காட், அனல்மின்நிலையம் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆகிய இடங்களில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க போராடினர். காலை 6 மணிக்கு எரியத் தொடங்கிய தீயை மாலை 4 மணி வரை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
தீவிபத்தில் அந்த தொழிற்சாலையில் வைத்து இருந்த சுமார் 10 டன் தென்னை நார்க்கழிவுகள் எரிந்து சேதம் அடைந்தன. தென்னை நார்க்கழிவுடன் சேர்த்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே தயாரித்து வைத்து இருந்த தென்னை நார்க்கட்டிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story