என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் மீதான ஊழல் வழக்கு முடித்து வைப்பு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற வாய்ப்பு


என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் மீதான ஊழல் வழக்கு முடித்து வைப்பு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற வாய்ப்பு
x
தினத்தந்தி 9 Feb 2018 4:00 AM IST (Updated: 9 Feb 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் மீதான ஊழல் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதால், அவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை,

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் மீதான ஊழல் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதால், அவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழல் வழக்கு

மும்பையில் 1990-ம் ஆண்டுகளில் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சுமார் 80 ரவுடி, தாதாக்களை சுட்டுக்கொன்றவர் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புதுறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார். இந்தநிலையில் தயாநாயக் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவருக்கு எதிராக குற்றப்பதிவு தாக்கல் செய்ய மாநில அரசு, போலீஸ் டி.ஜி.பி. ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லையென்பதால் தயா நாயக் மீதான ஊழல் வழக்கை முடித்து வைக்குமாறு லஞ்சஒழிப்பு துறை மும்பை சிறப்பு கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. ஆனால் அதை உடனடியாக ஏற்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

பதவி உயர்வு வாய்ப்பு

இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டு தயா நாயக் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இந்தநிலையில் தயாநாயக் மீதான வழக்கை முடித்து வைக்க கோர்ட்டு முன்வந்துள்ளது. சிறப்பு கோர்ட்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ஏற்று கொண்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதி டி.கே.குடதே கூறுகையில், “இறுதி அறிக்கை ஏற்று கொள்ளப்படவேண்டும். அந்த வகையில் விசாரணை துறையினரின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்றார்.

தயாநாயக் மீதான ஊழல் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலான ஊதியமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story