பைகுல்லா ராணி பூங்காவில் மலர் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது
பைகுல்லா ராணி பூங்காவில் மலர் கண்காட்சி இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
மும்பை,

மலர் கண்காட்சி
மும்பை மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் பைகுல்லாவில் உள்ள ராணி பூங்காவில் மலர்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விதவிதமான பூக்கள், தாவரங்கள், செடிகள் வைக்கப்பட்டு இருக்கும். உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு ரக பூக்களும் கண்காட்சியில் இடம்பெறும். எனவே இந்த கண்காட்சியை லட்சக்கணக்கிலான மக்கள் வந்து பார்த்து ரசிப்பார்கள்.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மும்பை மேயர் விஷ்வநாத் மகாதேஸ்வர் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
பொதுமக்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை இலவசமாக கண்டு ரசிக்கலாம்.
மூங்கில் லாரி
இது குறித்து மாநகராட்சி பூங்கா துறை அதிகாரி ஒருவர் கூறும்போது:-
இந்த ஆண்டும் மலர் கண்காட்சியை பார்க்க லட்சக்கணக்கிலான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கண்காட்சியில் சிறுவர்களை கவரும் வகையில் மலர் மற்றும் செடிகளால் வடிவமைக்கப்பட்ட ராட்சத நத்தை, ஆமை, டால்பின் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல பூச்செடிகளால் அலங்கரிக்கப்பட்ட மூங்கில் லாரி அனைத்து தரப்பினரையும் கவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story