குழந்தைகளை தூக்கிச்சென்றதால் தற்கொலை: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
மானாமதுரை அருகே குழந்தைகளை தூக்கிச்சென்றதால் தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மானாமதுரையில் அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மானாமதுரை,
மானாமதுரையை அடுத்த கொம்புகாரனேந்தல் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 27). கோவையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கொந்தீசுவரி (21). இவர்களுக்கு கதிர்வேல்(4), பிரியங்கா(2½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கொந்தீசுவரி அப்பகுதியில் மகளிர் சுயஉதவி குழுவில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் செலுத்த முடியவில்லை. இதனையடுத்து தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொந்தீசுவரி, கலியனேந்தலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் கொம்புகாரனேந்தல் மகளிர் சுயஉதவி குழுவினர் கலியனேந்தலில் உள்ள கொந்தீசுவரியின் பெற்றோர் வீட்டிற்கு கடனை கேட்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கொந்தீசுவரி இல்லை. இதனையடுத்து மகளிர் குழுவினர் கொந்தீசுவரியின் தாயார் நாகம்மாள், தம்பி மாயகண்ணன்(8) மற்றும் அவருடைய குழந்தைகள் கதிர்வேல், பிரியங்காவை அழைத்துக்கொண்டு 3 நாட்களாக கொம்புகாரனேந்தலில் உள்ள கணேசன் வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இதுகுறித்து அறிந்த கொந்தீசுவரி குழந்தைகளை தூக்கிச்சென்ற விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கொந்தீசுவரியின் உடல் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் கொந்தீசுவரி இறந்த செய்தியை அறிந்த மகளிர் குழுவினர் அவருடைய தாயாரையும், குழந்தைகளையும் விடுவித்துள்ளனர். இதனையடுத்து தாயார் நாகம்மாள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு நாகம்மாள் குழந்தைகளுடன் ஆதரவின்றி தவித்தார். இதுகுறித்து கணவர் கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் நேற்று காலை வந்தார். மகளிர் சுயஉதவி குழுவினர் இந்த செயலில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி, மகளிர் சுயஉதவிக்குழு தலைவி வீராயி மற்றும் பாண்டியம்மாள், முத்துமாரி, வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் வரை மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. மேலும் அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு காரணமான மகளிர் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து நேற்று மானாமதுரை-தாயமங்கலம் சாலையில் கொந்தீசுவரி தாயார் நாகம்மாள், குழந்தைகளுடன் உறவினர்களும், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பாலு, நகர செயலாளர் காளி, விடுதலைச் சிறுத்தைகள் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வீரய்யா ஆகியோர் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கொந்தீசுவரி சாவிற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் சிவகங்கை கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியல் செய்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து உடலை வாங்க மறுத்து மறியல் நடைபெற்றது.

Related Tags :
Next Story