டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: 1,03,629 பேர் எழுதுகிறார்கள்
நாளை நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை நெல்லை மாவட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 629 பேர் எழுகிறார்கள்.
நெல்லை,

டி.என்.பி.எஸ்.சி.குரூப்- 4 தேர்வு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மூலம் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
16 மையங்கள்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நெல்லை மாவட்டத்தில் நெல்லை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, வள்ளியூர், வீரகேரளம்புதூர், சேரன்மாதேவி, கடையநல்லூர், மானூர், திருவேங்கடம் ஆகிய 16 மையங்களில் நடக்கிறது.
இந்த தேர்வை 1 லட்சத்து 3 ஆயிரத்து 629 பேர் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க உதவி கலெக்டர் நிலையில் 63 சுற்றுக்குழு அலுவலர்களும், உதவியாளர் நிலையில் 371 ஆய்வுப்பணி அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
வீடியோ கேமரா மூலம்
தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவது வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பஸ்களை தேர்வு மையத்துக்கு சரியான நேரத்தில் இயக்க வேண்டும்.
தேர்வு மையங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். தேர்வு அறைக்குள் செல்போன்களை எடுத்து செல்லக்கூடாது. தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க கூடாது. அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து தேர்வை சிறப்பாக நடந்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் மைதிலி (நெல்லை), ஆகாஷ் (சேரன்மாதேவி), ராஜேந்திரன் (தென்காசி), தமிழ்நாடு தேர்வாணைய பிரிவு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story