தேவிபட்டினம் ஊராட்சி பகுதியில் குறைபாடுகளை போக்க வேண்டும், மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
தேவிபட்டினம் ஊராட்சி பகுதியில் அனைத்து குறைபாடுகளையும் போக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பனைக்குளம்,
தேவிபட்டினம் பஸ் நிலையம் அருகே மனித நேய மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தேவிபட்டினம் த.மு.மு.க., மனித நேய மக்கள் கட்சி தலைவர் ராவுத்தர் நெய்னா முகமது தலைமை தாங்கினார். மாவட்ட, ஒன்றிய, நகர், பேரூர், வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டினம் வரும் அனைத்து பஸ்களும் அரசு ஆஸ்பத்திரி, பழங்கோட்டை ஆகிய இடங்களில் நின்று செல்ல வேண்டும். தேவிபட்டினத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் 24 மணி நேரமும் பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும். சிங்கனேந்தல் தரைப்பாலத்தை சீரமைத்து விபத்தை தடுக்க வேண்டும். தேவிபட்டினம் ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் உடனே போக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாகீர், ம.ம.க. மாவட்ட செயலாளர் ஜகாங்கீர் அலி, முன்னாள் ஊராட்சி தலைவர் ஜாகீர் உசேன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஏற்பாடுகளை த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உமர் கத்தாப், முகமது மைதீன், ஹமீது இபுராகீம், சாகுல் வாசிம், முகமது ஜாசர், செய்யது இபுராகீம், அஜ்மல்கான் மற்றும் பலர் செய்திருந்தனர். முடிவில் ம.ம.க. செயலாளர் தீன் சாலிகு நன்றி கூறினார்.

Related Tags :
Next Story