சென்னையில் இருந்து தப்பிய ரவுடிகள் நெல்லையில் பதுங்கலா? போலீசார் தேடுதல் வேட்டை
சென்னையில் தப்பி ஓட்டம் பிடித்த ரவுடிகள் நெல்லையில் பதுங்கி உள்ளார்களா? என்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,

சென்னை சம்பவம்
சென்னையில் பிரபல ரவுடி பினு பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது, 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இதுதவிர நூற்றுக்கணக்கான ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் சென்னை முழுவதும் தேடி வந்தனர். இந்த நிலையில் ரவுடி பினு பிறந்த நாளில் கலந்து கொண்டவர்களில் நெல்லையை சேர்ந்த ரவுடிகளும் இடம் பிடித்திருந்த தகவல் கிடைத்து உள்ளது. சென்னையில் நடைபெற்ற பல்வேறு கொலைகள் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் இடம் பெற்று வருகின்றனர். சமீப காலமாக சென்னையில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் நெல்லையை சேர்ந்த ரவுடிகள் போலீசாரிடம் சிக்கி வருகின்றனர்.
தேடுதல் வேட்டை
இதையடுத்து சென்னையில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள், கூலிப்படையினரின் பட்டியலை சென்னை போலீசாரும், நெல்லை மாவட்ட போலீசாரும் பகிர்ந்து உள்ளனர். அதனடிப்படையில் குறிப்பிட்ட ரவுடிகள் நெல்லை மாவட்டத்துக்கு தப்பி வந்து பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவுப்படி நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story