ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் வங்கி கணக்கு மூலம் கருப்பு பண பரிமாற்றம்? பழனி அருகே பரபரப்பு
பழனி அருகே, ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் வங்கி கணக்கு மூலம் கருப்பு பண பரிமாற்றம் நடத்த முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
திண்டுக்கல்
பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். மேலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் இங்கு கணக்கு வைத்துள்ளனர்.
இவர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் அந்த வங்கி கிளை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் வங்கி கணக்கில் ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இருப்பு உள்ளதாக அவர்களின் செல்போன் எண்ணுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு சென்று தங்கள் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்தனர். அப்போது அவர்களின் வங்கி கணக்கில் ரூ.95 இருப்பு உள்ளதாக ஏ.டி.எம். மையத்தில் துண்டுசீட்டு கிடைத்தது. மேலும் அவர்களால் அந்த தொகையை எடுக்க முடியாதபடி கணக்கும் முடக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பாப்பம்பட்டியில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்று அதிகாரிகளிடம் இது குறித்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து பணியாளர்கள் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் வங்கி கணக்கில் எங்களுக்கு தெரியாமல் ரூ.95 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இருப்பு உள்ளது. வங்கிக்கு சென்று விசாரித்தால் நீங்கள் கணக்கு தொடங்கும் போது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளின் விவரங்களை வங்கி கணக்குடன் இணைக்கவில்லை.
அதனால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனவே உரிய ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்தால் கணக்கு திரும்பவும் செயல்படும் என தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் எங்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி கருப்பு பணபரிமாற்றம் நடத்துகிறார்களோ? என்ற சந்தேகம் உள்ளது என்றனர்.
இது குறித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பாப்பம்பட்டி கிளை மேலாளரான செந்தில்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் எங்கள் வங்கி மூலம் நேரடியாக கணக்கு தொடங்கவில்லை. அந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலமே கணக்கு தொடங்கினர். அப்போது அவர்களிடம் எந்த ஆவணங்களும் பெறப்படாமல் கணக்கு தொடங்கப்பட்டது. அதனாலேயே அவர்களின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக கணக்கை முடக்கும் போது அந்த கணக்கு விவரங்களை வங்கி அதிகாரிகள் எளிதில் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு கணக்கிற்கும் கற்பனை தொகையாக ரூ.1 லட்சம் நிர்ணயம் செய்யப்படும்.
இது அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக காட்டாது. மாறாக அவர்கள் கணக்கில் உள்ள தொகையை கற்பனை தொகையான ரூ.1 லட்சத்தில் கழித்து மீதம் உள்ள தொகையை தான் அவர்கள் கணக்கில் உள்ள இருப்புத்தொகையாக காண்பிக்கும். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் வங்கியில் பதிவு செய்த பின் அவர்களின் கணக்கு வழக்கம் போல் செயல்பட தொடங்கும். இதில் கருப்பு பண பரிமாற்றம் நடக்கிறது என அவர்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே இந்த சம்பத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story