நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டி பெண் படுகொலை
நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். அவர் நரபலி கொடுக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல்,
நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் அருகே உள்ளது நல்லிக்கவுண்டன்புதூர். இங்கு சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பாலத்தின் கீழ் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட கை மற்றும் 2 கால்கள் சாக்குபைகளால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற அப்பகுதி மக்கள் பார்த்து நல்லிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் துண்டு துண்டாக கிடந்த கை மற்றும் கால்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உடலின் மற்ற பாகங்கள் மற்றும் தலை கிடக்கிறதா? என பல்வேறு குழுக்களாக பிரிந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கழுத்து திருகப்பட்டு, இறந்த நிலையில் 3 ஆடுகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த ஆடுகளையும் போலீசார் மீட்டு பரிசோதனைக்காக லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், துண்டு துண்டாக கிடந்த கை, கால்கள் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணுடையதாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அந்த பெண்ணை பயங்கரமாக வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என்றும், பின்னர் அவரது உடலை நீரில் வைத்து பதப்படுத்தி, கொலை செய்தவர்கள் துண்டு துண்டாக வெட்டி இங்கே வீசிச்சென்று இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெண்ணின் கை, கால்கள் கிடந்த இடத்தின் அருகே ஆடுகள் இறந்து கிடந்ததால் நரபலிக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் நல்லிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அவர் சேலம் அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கொலையில் துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதோடு, அருகில் உள்ள பிற மாவட்ட போலீசாருக்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அந்த பெண்ணின் தலை மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட பின்பு தான் அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும் என போலீசார் கூறினார்கள்.

Related Tags :
Next Story