ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:45 AM IST (Updated: 10 Feb 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு ஊதியத்தை வழங்க வேண்டும்.

தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெகன்நாதன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story