10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவையில், 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோவை,
கோவையை அடுத்த இருகூரை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 57). கூலித்தொழிலாளி. இவருடைய 10 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2015-ம் ஆண்டு அந்த சிறுமி வகுப்பில் சோர்வுடன் காணப்பட்டாள். இதைப்பார்த்த ஆசிரியை ஏன் சோர்வுடன் இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி தனது தந்தை மற்றும் சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள்.இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தினர் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 30.1.2015 அன்று குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தினர் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவளது தந்தை ஏசுதாசை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் பிரேம்குமார்(19), பாலகிருஷ்ணன்(33), ரவிக்குமார்(27) ஆகியோரும் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது. கூலித்தொழிலாளர்களான அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீதான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்புக் கூறப்பட்டது. 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை ஏசுதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் பிரேம்குமார், பாலகிருஷ்ணன், ரவிக்குமார் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி அல்லி தீர்ப்புக்கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் சரோஜினி ஆஜரானார்.

Related Tags :
Next Story