திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அந்த சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதன்படி நேற்று காலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடிய ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பிரபு செபஸ்டியான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கனகராஜ், பொருளாளர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
போராட்டத்தில், தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும்.
உயர்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியத்தை தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறை ஆணை மூலம் நிறுத்தி வைத்துள்ளதை திரும்ப பெற வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ள மூத்தோர்-இளையோர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பிற துறைகளில் உள்ளது போல எந்த வித நிபந்தனைகளும் இன்றி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். பொது மாறுதலுக்கு பின் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு கடந்த காலங்களை போல் 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும்.
8-வது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி ஊதியம் ரூ.2 ஆயிரத்துக்கும் அதற்குரிய முழு பணப்பலன்களும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related Tags :
Next Story