‘ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் பல சிஸ்டங்கள் அவருக்கு தெரிய வரும்’
எந்த சிஸ்டம் கெட்டு விட்டதாக சொல்கிறார் என்று தெரியவில்லை. ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால்தான் அவருக்கு பல சிஸ்டங்கள் தெரிய வரும் என்று ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர்கள் ருக்மணி கிருஷ்ணன், பொன்.முத்துவேல், பகுதிச்செயலாளர்கள் அறிவுடைநம்பி, எஸ்.சரவணன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், கோ.சாமிவேல், சத்தியமூர்த்தி, துரை.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களுக்காக வாழ்ந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும், ஏழை-எளிய மக்கள், முதியோர், ஆதரவற்ற குழந்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளில் கட்சியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் 2 மரக்கன்றுகளையாவது நடவேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஒற்றுமையுடன் ஈடுபடவேண்டும். பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
அ.தி.மு.க.வை பற்றி பல பேர் பலவிதமாக பேசுகிறார்கள். சிலர் இந்த இயக்கத்தை கைப்பற்ற போகிறேன் என்கிறார்கள். மேலும் என்னையும், இந்த இயக்கத்தில் இருக்கிறவர்களையும் துரோகிகள் என்கிறார்கள். நான் பேச ஆரம்பித்தால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. நான் பள்ளிப்பருவத்திலேயே இந்த இயக்கத்தில் சேர்ந்தவன்.
எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ அவர்களுடைய உறவினர்களை கட்சிக்குள் கொண்டு வரவில்லை. இந்த இயக்கம் குடும்ப சொத்தாக ஆக வேண்டும் என்று எம்.ஜி.ஆரும் நினைக்கவில்லை, ஜெயலலிதாவும் நினைக்கவில்லை. இந்த இயக்கத்தை யாரும் கைப்பற்றிவிடலாம் என்று நினைத்தால் புரட்சித்தலைவரின் தொண்டன் விடமாட்டான். அதேபோல இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.
ஜனநாயக நாட்டில் யாரும் கட்சி ஆரம்பிக்கலாம். மக்கள் ஏற்றுக்கொள்வதை பொறுத்து தான் அவர்களுடைய அரசியல் பயணம் இருக்கும். இன்றைக்கு காவிரியில் தண்ணீர் இல்லை. தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறும் ரஜினிகாந்த், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் பேசி தண்ணீர் திறந்து விடுங்கள் என்று சொன்னாரா? ஏன், வாய் திறக்கவில்லை. கமலஹாசன் பேசினாரா?.
இவர்கள் எல்லாம் அரசியலில் நிற்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் அவர்களுக்கு தைரியம் கிடையாது. அவர்களுடைய ஆற்றல் எல்லோருக்கும் வராது. இவ்வாறு ஆர்.வைத்திலிங்கம் பேசினார்.
இதில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கு.பரசுராமன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் சி.வி.சேகர், கோவிந்தராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாநில கயிறுவாரிய தலைவர் நீலகண்டன், மாணவர் அணிச்செயலாளர் ஆர்.காந்தி, மகளிர் அணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஜே.வி.கோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, கட்சியில் 2 கோடிக்கும் அதிகமாக உறுப்பினர்களை சேர்ப்பது, ஜெயலலிதாவின் பிறந்தநாளில் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 81 ஏழை-எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பின்னர் வைத்திலிங்கம் எம்.பி.யிடம் நிருபர்கள், தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு விட்டதாக ரஜினி கூறியுள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘எந்த சிஸ்டம் கெட்டு விட்டதாக சொல்கிறார் என்று தெரியவில்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் அவருக்கு பல்வேறு சிஸ்டங்கள் தெரிய வரும்’ என்றார்.

Related Tags :
Next Story