தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ராகுல் காந்தி இன்று கர்நாடகம் வருகை 4 நாட்கள் சுற்றுப்பயணம்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.
பெங்களூரு,
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் சார்பில் வரவேற்பு
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று(சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த 4 நாட்களும் ராகுல் காந்தி வட கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சி சார்பில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.
ராகுல் காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பல்லாரிக்கு வருகிறார். மதியம் 1 மணிக்கு ஒசப்பேட்டேயில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பின்னர் கொப்பல் மாவட்டத்திற்கு செல்லும் அவருக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மடாதிபதியின் ஆசியை...
அதைத்தொடர்ந்து அங்குள்ள பிரசித்த பெற்ற ஹுலிகம்மா கோவிலுக்கு சென்று ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு லிங்காயத் மதத்தை சேர்ந்த கவி சித்தேஸ்வரா மடத்திற்கு சென்று மடாதிபதியின் ஆசியை அவர் பெறுகிறார். அதன் பின்னர் யலபர்காவில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இரவில் கொப்பலில் ராகுல் காந்தி தங்குகிறார்.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) ராய்ச்சூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் ராகுல் காந்திக்கு, சிந்தனூரில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். அங்கு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடல் நடத்துகிறார். அந்த கலந்துரையாடலை முடித்துக் கொண்டு சாலை வழியாக சிந்தனூரில் இருந்து ராய்ச்சூருக்கு வரும் அவர் அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
யாதகிரிக்கு வருகிறார்
நாளை மறுநாள் அதாவது 12-ந் தேதி ராகுல் காந்தி யாதகிரி, கலபுரகி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் பஸ் மூலம் ராய்ச்சூரில் இருந்து யாதகிரிக்கு வருகிறார். அங்கு சகனாபுரில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் கலபுரகி மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு ஜேவர்கி மற்றும் கலபுரகியில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பேசுகிறார்.
இந்த பொதுக்கூட்டங்களை தொடர்ந்து கலபுரகியில் பழமையான தர்காவுக்கு அவர் செல்கிறார். இரவில் ராகுல் காந்தி கலபுரகியில் தங்குகிறார். 13-ந் தேதி, 4-ம் நாள் சுற்றுப்பயணத்தில் முதல் நிகழ்ச்சியாக மறைந்த முன்னாள் மந்திரி கமருல் இஸ்லாம் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.
கலந்துரையாடல்
அதைத்தொடர்ந்து கலபுரகியில் தொழில் அதிபர்கள், தொழில்நுட்ப நிபுணர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் ஹெலிகாப்டர் மூலம் பீதர் மாவட்டம் பசவகல்யாணில் உள்ள பசவண்ணர் உருவாக்கிய அனுபவ மண்டபத்திற்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பீதர் டவுனுக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ராகுல் காந்தி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பகுதிகள் மற்றும் தங்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். வட கர்நாடகத்தில் மக்களின் ஆதரவை பெறும் வகையில் ராகுல் காந்தியின் இந்த சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Related Tags :
Next Story