சாலை வசதி கேட்டு கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
சாலை வசதி கேட்டு கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கம்மாபுரம்,
கம்மாபுரம் அருகே இருளக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் பகுதிக்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதேபோல் நரசிங்க பெருமாள் கோவிலிருந்து பூண்டியாங்குப்பம் செல்வதற்கான சாலையும் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்த வருகின்றனர். இது குறித்து புகார் தெரிவித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த கலைச்செல்வன், ராயர், முரளி, சாமிதுரை, சரவணன், முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், இருளக்குறிச்சியில் சாலை வசதி முறையாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், காமராஜ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதனை பெற்ற அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story