சிறுபான்மை மக்களை கர்நாடக காங்கிரஸ் அரசு, வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு


சிறுபான்மை மக்களை கர்நாடக காங்கிரஸ் அரசு, வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Feb 2018 3:00 AM IST (Updated: 10 Feb 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக காங்கிரஸ் அரசு, சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது என்று ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம்சாட்டினார்.

ர்நாடக காங்கிரஸ் அரசு, சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது என்று ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம்சாட்டினார்.

வாக்கு வங்கியாக...

கர்நாடக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:-

சிறுபான்மை மக்கள் கல்வி பெற்று வளர்ந்துவிட்டால் நமக்கு அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று கருதி இந்த அரசு அந்த மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்ற எந்தவித வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. சிறுபான்மை மக்களை பட்டறைகளிலேயே வைத்துக் கொண்டு அவர்களை வாக்கு வங்கியாக இந்த காங்கிரஸ் அரசு பயன்படுத்தி வருகிறது.

முத்தலாக் தடை

சிறுபான்மை சமுதாயத்திற்கு காங்கிரசை போல் வேறு எந்த கட்சியும் அநீதி இழைத்திருக்க முடியாது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது சிறுபான்மை மக்களின் மேம்பாட்டிற்காக சச்சார் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கை வழங்கி பல ஆண்டுகள் ஆனாலும் அதை அமல்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றது ஏன்?.

இஸ்லாமிய பெண்களுக்கு நியாயம் பெற்றுத்தர முத்தலாக் தடை மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதை மேல்-சபையில் காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?. இஸ்லாமிய பெண்களின் நலனில் அக்கறை இருந்தால் காங்கிரஸ் இதை எதிர்க்கக்கூடாது. முத்தலாக் ரத்து மசோதாவை இஸ்லாமிய பெண்களே வரவேற்று உள்ளனர்.

பிரித்தாளும் கொள்கையை...

காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் கொள்கையை பின்பற்றி வருகிறது. இந்த பிரித்தாளும் கொள்கை நீண்ட நாட்களுக்கு வெற்றி பெறாது. சிறுபான்மையினர் மீதான வழக்குகளை இந்த அரசு வாபஸ் பெற முடிவு செய்தது. பா.ஜனதா எதிர்த்ததால் அந்த முடிவை காங்கிரஸ் அரசு நிறுத்தி வைத்துள்ளது. மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்தால் அந்த வழக்குகளை ரத்து செய்வதாக மாநில அரசு கூறுகிறது.

கர்நாடகத்தில் ஊழல் தாண்டவமாடுகிறது. அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மணல் கொள்ளை நடக்கிறது. இந்த காங்கிரஸ் ஆட்சியில் நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது. பிரதமர் மோடி இந்த அரசை 10 சதவீத ‘கமிஷன்’ அரசு என்று சொன்னார். ஆனால் இந்த அரசு 30 சதவீத ‘கமிஷன்’ அரசாக உள்ளது.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் பேசினார்.

Next Story