லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு பணம் திரட்டி கொடுத்த பயங்கரவாதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு பணம் திரட்டி கொடுத்து வந்த பயங்கரவாதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,

பயங்கரவாதி கைது
பெங்களூரு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 2007-ம் ஆண்டு பயங்கரவாதியான பிலால் அகமது ஹூடா என்ற இம்ரான் ஜலால் என்பவரை கைது செய்திருந்தார்கள். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 200-க்கும் மேற்பட்ட குண்டுகள், வெடிப் பொருட்கள் மற்றும் ரூ.34,830 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், கடந்த 2001 -ம் ஆண்டில் இருந்து பயங்கரவாதி பிலால் அகமதுவுக்குலஷ்கர்- இ- தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த தீவிரவாத அமைப்புக்கு பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் இருந்து பணம் திரட்டி அனுப்பி வைத்ததும், ஆட்களை சேர்க்கும் வேலையிலும் பிலால் அகமது ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்திய பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
7 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு கோர்ட்டில் நீதிபதி சிவ்சங்கர் அமரன்னவர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சிவ்சங்கர் அமரன்னவர் தீர்ப்பு கூறினார்.
அப்போது பயங்கரவாதி பிலால் அகமதுவுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடர்பு இருப்பதும், அந்த அமைப்புக்கு பணம் திரட்டி கொடுத்ததும், ஆட்களை சேர்த்து விடும் பணியில் ஈடுபட்டதுடன், சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததும் நிரூபணமானதால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் பயங்கரவாதி பிலால் அகமதுவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதத்தையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story