கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம் பெறும் தேவேகவுடா அறிவிப்பு


கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம் பெறும் தேவேகவுடா அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2018 3:00 AM IST (Updated: 10 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம் பெறும் என்று தேவேகவுடா அறிவித்தார்.

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம் பெறும் என்று தேவேகவுடா அறிவித்தார்.

தனித்து களம் காண்பதாக...

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் மக்களின் ஆதரவை திரட்டும் பணியில் இறங்கிவிட்டனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் தனித்து களம் காண்பதாக தேவேகவுடா தொடர்ந்து கூறி வந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கர்நாடகத்தில் தலித் மக்களை மையமாக வைத்து செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தேவேகவுடா விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கம்யூனிஸ்டு கட்சிகளும்...

எங்கள் கட்சியின் தேர்தல் பிரசார மாநாடு வருகிற 17-ந் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் எங்கள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வட கர்நாடகத்தில் நானும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதியும் இணைந்து பிரசாரம் நடத்துவோம். வட கர்நாடகத்தில் குமாரசாமி போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.

அடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். எங்கள் கட்சி கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம் பெறும். ஆனால் தேசிய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story