பாந்திராவில் சுவர் இடிந்து விழுந்து 2½ வயது சிறுவன் சாவு


பாந்திராவில் சுவர் இடிந்து விழுந்து 2½ வயது சிறுவன் சாவு
x
தினத்தந்தி 10 Feb 2018 4:23 AM IST (Updated: 10 Feb 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பாந்திரா நிர்மல் நகரை சேர்ந்தவர் சுரேஷ் புஜாரி. எலக்ட்ரீஷியன். இவரது மனைவி ஹேமா. இந்த தம்பதிக்கு 2½ வயதில் ஆயுஷ் என்ற மகன் இருந்தான்.

மும்பை,

சிறுவன் ஆயுஷ்   சம்பவத்தன்று மதியம் அங்குள்ள மழலையர் பள்ளிக்கு செல்வதற்காக கிளம்பி தாயுடன் வீட்டிற்கு வெளியே வந்தான். அப்போது வீட்டிற்குள் மறந்து வைத்து விட்டு வந்த தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்காக அவனை அங்கேயே நிற்க சொல்லி விட்டு தாய் வீட்டினுள் சென்றார்.

அப்போது துரதிருஷ்டவசமாக அவர்களது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சுவர் திடீரென இடிந்து சிறுவன் ஆயுஷ் மீது விழுந்து அமுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவன் பரிதாபமாக இறந்து போனான். போலீசார் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story