2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலை முயற்சி
கரூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு. தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நொய்யல்,
கரூர் ஆண்டாங்கோவில் புதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ஜெயக்குமாரின் மனைவி விஜயலட்சுமி(வயது 28). இவர் கரூர் அருகே புகளூர் காகித ஆலையில் மனிதவள பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் யாழினி(6), மகன் பிரனித்(2). யாழினி ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். இந்த நிலையில் காகித ஆலை அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை விஜயலட்சுமி மற்றும் சக ஊழியர்கள் சிலர் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்று அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்து ஊர் திரும்பினர்.
இதில் சோர்வாக இருந்ததால் விஜயலட்சுமி நேற்று காலை பணிக்கு செல்லவில்லை. மகள் யாழினியையும் பள்ளிக்கு அனுப்பவில்லை. 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வேலாயுதம்பாளையம் அருகே மூலிமங்கலத்தில் உள்ள தனது தாய் கண்ணம்மாள் வீட்டிற்கு விஜயலட்சுமி சென்றார். கணவர் ஜெயக்குமார்அவர்களை கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மூலிமங்கலத்தில் தாய் வீடு மற்றும் அருகில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கும் விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு மேல் தாய் கண்ணம்மாள் வீட்டின் அருகே உள்ள அவரது கிணற்றில் யாழினி, பிரனித் 2 குழந்தைகளையும் விஜயலட்சுமி தூக்கி வீசி விட்டு தானும் குதித்தார். அப்போது கிணற்றில் வீசப்பட்ட குழந்தைகள் சத்தம் எழுப்பி அலறியது. விஜயலட்சுமியும் சத்தம் எழுப்பி உள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த 2 குழந்தைகளையும், தாயையும் மீட்டனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் வேனில் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் யாழினி, பிரனித் ஆகிய 2 குழந்தைகளையும் டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவர்கள் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. தாய் விஜயலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விஜயலட்சுமியின் உறவினர்கள், கணவர் மற்றும் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இறந்த 2 குழந்தைகளின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் கண்ணீர் மல்க சோகத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்த 2 குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு, தாயும் குதித்து தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் என்ன? என உடனடியாக தெரியவில்லை. மருத்துவமனையில் திரண்டிருந்த உறவினர்கள், கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே காகித ஆலை நிறுவனத்தை சேர்ந்த சக ஊழியர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story