சகாரா பாலைவனத்தில் உலவிய டைனோசர்கள்
சகாரா பாலைவனப் பகுதியில் பஸ் அளவிலான ராட்சத டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய சகாரா பாலைவனப் பகுதியிலும் டைனோசர்கள் உலவித் திரிந்திருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
டைனோசர்கள் அதிக அளவில் காணப்பட்ட பிரதேசமாக ஆப்பிரிக்கா விளங்குகிறது. இது தவிர ஆசிய கண்டப் பகுதியிலும் அவை பரவலாகக் காணப்பட்டுள்ளன.
அதேபோன்று, எகிப்தில் உள்ள சகாரா பாலைவனப் பகுதியில் பஸ் அளவிலான ராட்சத டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்சோரா பல்கலைக்கழக ஆய்வாளர்களே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்எகிப்தில் உள்ள சகாரா பாலைவனப் பகுதியில் பஸ் அளவிலான ராட்சத டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
அந்த டைனோசர்கள் தரையில் வாழக்கூடிய பிராக்கியோசாரஸ் மற்றும் டிப்லோடோகஸ் இனங்களைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவை 8 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகவும், சுமார் 8 முதல் 10 மீட்டர்கள் நீளம் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story