அரசு விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் நடந்த அரசு விடுதி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த அரசு விடுதி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு போட்டி
அரசு விடுதி மாணவ, மாணவிகளுக்கு ‘ஓடி விளையாடு‘ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, தூத்துக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாணவ–மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவ–மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மூலமாக, தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவ–மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து வருகிறது.
1,061 மாணவ–மாணவிகள்
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டில் மாணவ–மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ‘ஓடி விளையாடு‘ என்ற தலைப்பில், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி கற்கும் மாணவ–மாணவிகளிடையே விளையாட்டு போட்டிகள் இன்று (அதாவது நேற்று) முதல் 2 நாட்கள், காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் கபடி, கோ–கோ, வளைபந்து, இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் மொத்தம் 1,061 மாணவ–மாணவிகள் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் உணவு, சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சேகர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தீர்த்தோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story