பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ அமைப்பினர் தர்ணா போராட்டம்
பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ அமைப்பினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,

தர்ணா போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைந்த கிறிஸ்தவ ஐக்கியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று காலை தர்ணா போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துக்கு நெல்லை திருமண்டல சி.எஸ்.ஐ. குருத்துவ செயலாளர் ஸ்டீபன் செல்வின் ராஜ் தலைமை தாங்கினார். கிளாரன்ஸ் மருதையா, ராஜன் எட்வர்ட், சாம் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த கிறிஸ்தவ ஐக்கிய தலைவர் தனராஜ் வரவேற்று பேசினார்.
கோரிக்கைகள்
கிறிஸ்தவ மதபோதகர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், வீடுகளில் நடைபெறும் சபைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்து நடைபெறும் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும், கிறிஸ்தவ சபைகளுக்கான கல்லறை தோட்டத்துக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் வான்முகில் அமைப்பின் தலைவர் பிரிட்டோ, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்த செல்வின் வில்சன், வேளாங்கண்ணி ரவி, சூசை, டேவிட் ராஜன், தனசிங் மற்றும் மதபோதகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story