தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.52 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,

அமைச்சர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அடிக்கல் நாட்டி வைத்து சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரூ.52 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. இந்த சுற்றுச்சுவர் 550 மீட்டர் நீளம், 5.6 அடி உயரத்துடன் கட்டப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜகோபால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், ராம்கோ நிறுவனத்தின் துணைத்தலைவர் ராமலிங்கம், பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசுகையில், புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யாத்துரை பாண்டியன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story