பாளையங்கோட்டையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம்


பாளையங்கோட்டையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2018 2:30 AM IST (Updated: 10 Feb 2018 9:18 PM IST)
t-max-icont-min-icon

ரஜினி மக்கள் மன்றத்தின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது.

நெல்லை,

ரஜினி மக்கள் மன்றத்தின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசுகையில், ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். நெல்லை மாவட்டத்தில் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இந்த பணியில் நிர்வாகிகள் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர்கள் தங்கதுரை, குமரகுரு, தளபதி முருகன், மகளிர் அணி செயலாளர் பவானி குமணன், இளைஞர் அணி செயலாளர் தாயப்பன், இணை செயலாளர் பகவதிராஜன், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திகேயன், மீனவர் அணி செயலாளர் ஆல்ரீன், விவசாய அணி செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் மாதவராஜன், ஜாகீர் உசேன், ராஜ்குமார், ஆண்டியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story