கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தொழிற்சாலை ஊழியர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் தொழிற்சாலை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தீனதயாளன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவருக்கு பொன்மொழி (37) என்ற மனைவியும், சஞ்சய்குமார் (15), கீர்த்திக்குமார் (10)் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சரவணன் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து அதே தொழிற்சாலையில் வேலை செய்து வரும் கஜேந்திரன் (52) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கவரைப்பேட்டை நோக்கி சரவணன் சென்றார். மோட்டார் சைக்கிளை கஜேந்திரன் ஓட்டிச்சென்றார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த வேற்காடு என்ற இடத்தில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது அதே திசையில் வந்த லாரி ஒன்று கஜேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story