டெம்போ– வேன் மோதல்: ஒருவர் பலி 25 பேர் படுகாயம்


டெம்போ– வேன் மோதல்: ஒருவர் பலி 25 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Feb 2018 2:15 AM IST (Updated: 11 Feb 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

நாசிக் மாவட்டம் விஞ்சூர் பகுதியில் இருந்து நாகடே கிராமத்தை நோக்கி நேற்று முன்தினம் டெம்போ ஒன்று சென்று கொண்டிருந்தது.

நாசிக்,

நாசிக்– அவுரங்காபாத் சாலையில் விஷ்ணு நகர் அருகே சென்ற போது எதிரே வந்த வேனுடன் டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சந்த்வாடு தாலுகா கன்னட் கிராமத்தை சேர்ந்த மனோஜ் ஏக்நாத் (வயது 22) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக பலியானார். 8 பெண்கள், 7 குழந்தைகள் உள்பட 25 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story