லாரிகளில் தண்ணீர் வினியோகம் நிறுத்தம்; ராமேசுவரம் பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி


லாரிகளில் தண்ணீர் வினியோகம் நிறுத்தம்; ராமேசுவரம் பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Feb 2018 3:00 AM IST (Updated: 11 Feb 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

லாரிகளில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் ராமேசுவரம் பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் போதிய குடிநீர் ஆதாரம் இல்லாததால் மாங்காடு, சம்பை, ஓலைகுடா, சேராங்கோட்டை, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், வேர்க்கோடு, தனுஷ்கோடி, காந்திநகர், அண்ணாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தங்கும்விடுதிகள், கடைகள், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிகளில் இருந்து டேங்கர் லாரி மூலம் குடி தண்ணீர் சேகரிக்கப்பட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜான்அமல்ராஜ் என்பவர் குடிநீருக்காக தங்கச்சிமடம் பகுதியில் டேங்கர் லாரியில் தண்ணீர் எடுப்பதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் கிராம மக்கள், மீனவர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நேற்று லாரி உரிமையாளர்கள் சங்கம், வர்த்தக சங்கம், மீனவர்கள், நுகர்வோர் சங்கங்கள், மீனவ பிரதிநிதிகள், கிராமமக்கள் மாவட்ட கலெக்டர் நடராஜனை சந்தித்து மனுகொடுத்தனர். மேலும் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story