திருப்பூரில் மதுபோதையில் பணிக்கு வந்த தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பூரில் மது போதையில் பணிக்கு வந்த தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கனகமணி உத்தரவிட்டுள்ளார்
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு ஒன்றியம் காட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 10 மாணவ-மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள். இங்கு தலைமையாசிரியராக ஜான் ஜெரால்டு கென்னடி(வயது 54) என்பவரும், மற்றொரு ஆசிரியையும் பணியாற்றி வந்தனர்.
பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தலைமையாசிரியர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர். அதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கனகமணி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கனகமணி கூறியதாவது:-
காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் ஜெரால்டு கென்னடி மீது பல்வேறு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து உதவி தொடக்கக்கல்வி அதிகாரி விஸ்வநாதனை அந்த பள்ளிக்கு அனுப்பி விசாரணை நடத்தச் சொன்னேன். விசாரணையில், தலைமையாசிரியர் பள்ளி நேரத்தில் அடிக்கடி வெளியே சென்று புகைப்பிடிப்பதையும், மது குடித்து விட்டு வந்து தலைமையாசிரியர் அறையில் படுத்துக்கொள்வதையும் வழக்கமாக கொண்டிந்தார். மாணவர்களுக்கு பாடம் நடத்துவது, ஆசிரியர்களுக்கு பாடம் சம்பந்தமான குறிப்பேடு எழுதிக்கொடுப்பது போன்ற எந்த பணிகளும் செய்வதில்லை. பள்ளி நேரம் முடிந்தவுடன் பள்ளி மாணவர்கள் போதை மயக்கத்தில் இருக்கும் அவரை எழுப்பி வீட்டுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக செய்து வந்துள்ளனர். இதனால் ஆசிரியைதான் பள்ளியை கவனித்து வருகிறார்.
அந்த தலைமையாசிரியர் பல்வேறு குற்றச்சாட்டுகளால் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் வருத்தம் தெரிவித்து இந்த பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்தவர் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து அந்த பள்ளிக்கு நான் ஆய்வுக்கு சென்றேன்.
அப்போது, பள்ளியில் தலைமையாசிரியர் அறையில் இருந்த அவரால் எழுந்து நிற்கமுடியாத அளவுக்கு மது போதையில் இருந்தார். நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவரால் விளக்கம் அளிக்க முடியவில்லை. எனவே மது போதையுடன் பணிக்கு வந்த அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story