இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 3 மீனவர்கள் மண்டபம் திரும்பினர்
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான மீனவர்கள் 3 பேர் மண்டபம் திரும்பினர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 15-ந்தேதி நம்புமாரி என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் மீனவர்கள் ஜெயசீலன், சீனி இபுராம்ஷா, முனியசாமி, பாலகுமார் ஆகிய 4 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜெயசீலனின் மகன் ஸ்டீபன் (வயது 31) கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டபம் காந்தி நகர் பகுதியில் உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய இறுதிச்சடங்கில் இலங்கை சிறையில் உள்ள ஜெயசீலன் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜனும், மீன்துறை அதிகாரிகளும், இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் இலங்கையில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் ஜெயசீலனையும், அவருடன் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஜெயசீலன் உள்பட 4 மீனவர்களும் நேற்றுமுன்தினம் அங்குள்ள ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அப்போது அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்தபோது ஜெயசீலன், சீனி இபுராம்ஷா, முனியசாமி ஆகிய 3 பேர் மட்டுமே மீனவர்கள் என்பதும், பாலகுமார் என்ற பெயரில் பிடிபட்டு விடுதலையானவர், மண்டபம் அகதி முகாமில் வசித்து வந்த திரிகோணமலை யைச் சேர்ந்த இலங்கை அகதியான பிரதீபன் என்பதும் தெரியவந்தது.
தற்போது இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், தமிழகம் செல்ல மறுத்ததுடன் கட்டாயப்படுத்தி அனுப்பினால் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார். இதையடுத்து அவர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் ஜெயசீலன் உள்பட 3 மீனவர்களை மட்டும் இலங்கை கடற்படையினர் அழைத்துவந்து சர்தேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர். பின்னர் 3 மீனவர்களும் மண்டபம் கடலோர காவல்படை முகாமுக்கு நேற்று மாலை அழைத்து வரப்பட்டனர். அங்கு 3 மீனவர்களிடமும் கடலோர காவல்படை நிலைய கமாண்டர் வெங்கடேஷன் மற்றும் மத்திய,மாநில உளவு பிரிவினர், கடலோர போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களிடம் இலங்கை அகதியை உடன் அழைத்து சென்றது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது மீனவர் ஜெயசீலன் இறந்த மகனின் முகத்தை கூட பார்க்க முடியவில்லை என்று உறவினர்களை பார்த்து கதறி அழுதார்.
பின்னர் மீனவர் சீனிஇபுராம்ஷா கூறியதாவது:-
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி எங்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அங்கு எங்களுக்கு உணவு வழங்காமல் துன்புறுத்தினார்கள். விடுதலையாகி வந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்தால் படகை பறிமுதல் செய்வதுடன் 2 வருட சிறை தண்டனையுடன் கொழும்பு சிறையில் அடைத்து விடுவோம் என்று இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை செய்தனர். பிரதீபன் இலங்கை அகதி என்பது தெரியாமல் மீன்பிடிக்க அழைத்துச்சென்றுவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story