மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு உள்ளது - ஜி.ராமகிருஷ்ணன்


மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு உள்ளது - ஜி.ராமகிருஷ்ணன்
x
தினத்தந்தி 11 Feb 2018 4:15 AM IST (Updated: 11 Feb 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் இறந்துபோன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் கணேசன் குடும்பத்திற்கு நிதிஉதவி மற்றும் அவரது உருவப்பட திறப்புவிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில குழு உறுப்பினர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இடதுசாரி கட்சிகள் சார்பில் அரசை கண்டித்து கோட்டை நோக்கி ஊர்வலம் மறியல் போராட்டங்கள் நடைபெறவுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் நாடுமுழுவதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள். ஜி.எஸ்.டி. யால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.

கவிஞர் வைரமுத்து பேசியதை, சங்பரிவார் அமைப்புகள், பா.ஜனதா போன்றவை திசை திருப்புகின்றன. அரசியல்வாதிகளை போல ஆன்மிகவாதிகள் பேசக் கூடாது. மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து குறித்து ஆய்வு முடித்து அறிக்கை தாக்கல் செய்தபின்னர் தான் பேச வேண்டும். யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடாது.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு உள்ளது. மத்திய அரசின் மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மாநில அரசு எதிர்ப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story