மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை
மனைவி கோபித்துக்கொண்டு அவருடை அக்கா வீட்டிற்கு சென்றதால் மனவேதனையடைந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
திருச்சி,
திருச்சி தென்னூர் பிஷப் குளம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் யோவான் தாமஸ்(வயது 31). இவருக்கு திருமணமாகி ஆரோக்கிய சுகன்யா என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கம்ப்யூட்டர் என்ஜினீயரான யோவான் தாமஸ் தென்னூர் பகுதியில் உள்ள கம்ப்யூட்டர்களை சர்வீஸ் செய்யும் மையத்தில் பணிபுரிந்து வந்தார்.
மது குடிக்கும் பழக்கமுடைய யோவான் தாமஸ் கடந்த 8-ந்தேதி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, ஆரோக்கிய சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆரோக்கிய சுகன்யா கோபித்துக்கொண்டு தனது குழந்தையுடன் திருச்சி மேலப்புதூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார்.
தீக்குளித்து தற்கொலை
இதனால் மனவேதனையில் இருந்த யோவான் தாமஸ், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் அவர் வலியால் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவர் மீது எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு யோவான் தாமஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story