புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 362 வழக்குகளுக்கு தீர்வு


புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 362 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Feb 2018 4:15 AM IST (Updated: 11 Feb 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 362 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

புதுக்கோட்டை,

அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம், புதுக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களின் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று புதுக்கோட்டையில் தேசிய மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார்.

இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி லியாகத்அலி, புதுக்கோட்டை சார்பு நீதிபதி இந்திராணி, கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதிசாய்ப்பிரியா, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், 3 ஆயிரத்து 776 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் வங்கிகளுக்கு வாராக்கடன் தொடர்பான 2 ஆயிரத்து 405 வழக்குகளில், 76 வழக்குகளுக்கு ரூ.64 லட்சத்து 67 ஆயிரத்திற்கும், நீதிமன்ற நிலுவையில் இருந்த சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் உள்பட மொத்தம் 1,371 வழக்குகளில் 286 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்து 90 ஆயிரத்து 354 உள்பட மொத்தம் 362 வழக்குகளில் ரூ.2 கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 354-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக நிர்வாக உதவியாளர் தங்கராஜ் மாரியப்பன் குழுவினர் செய்திருந்தனர். 

Next Story