வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 18,789 பெண்கள் எல்.எல்.ஆர். பெற்றனர்
அரசின் ஸ்கூட்டர் மானியம் பெற உரிமம் அவசியம் என்பதால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 18,789 பெண்கள் எல்.எல்.ஆர். பெற்றனர்.
சேலம்,
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பெண்கள் பணியிடங்களுக்கு எளிதில் சென்றுவர வசதியாக இருசக்கர வாகனமான ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. தற்போது தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த 5-ந் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு செய்து 10-ந் தேதி(நேற்று) கடைசிநாள் என அறிவிக்கப்பட்டது.
ஸ்கூட்டர் மானியத்துடன் பெற விரும்பும் பெண்கள் அதற்கான விண்ணப்பங்களை சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை என 4 மண்டல அலுவலகங்கள், 4 நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் கட்டணமின்றி பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து நேற்று கடைசிநாளில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.
ஓட்டுனர் உரிமம் அவசியம் என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தினமும் பெண்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் பெண்கள் லைசென்சு பெறுவதற்கான விண்ணப்பம் செய்து எல்.எல்.ஆர். (பழகுனர் பதிவு உரிமம்) பெற்றனர்.
சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடேசன், செந்தில்குமார், சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதுவைநாதன், குலோத்துங்கன் ஆகியோர் எல்.எல்.ஆர். பெற வந்த பெண்களிடம் விண்ணப்பங்களையும், சான்றிதழ்களையும் வாங்கி சரிபார்த்தனர். இதுபோல சேலம் தெற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஓமலூர் மற்றும் வாழப்பாடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலும் எல்.எல்.ஆர். பெறுவது முடிந்து விட்டது.
சேலம் மாவட்டத்தில் ஸ்கூட்டர் மானிய திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மொத்தம் 18,789 பெண்கள் எல்.எல்.ஆர். பெற்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சேலம் மேற்கு-4,252, சேலம் கிழக்கு-2,507, சேலம் தெற்கு-1,617, சங்ககிரி-2,705, மேட்டூர்-1,950, ஆத்தூர்-2,998, ஓமலூர்-2,059, வாழப்பாடி-701.

Related Tags :
Next Story