கசந்த கல்யாண காட்சி


கசந்த கல்யாண காட்சி
x
தினத்தந்தி 11 Feb 2018 12:41 PM IST (Updated: 11 Feb 2018 12:41 PM IST)
t-max-icont-min-icon

தேவதைகளின் கதைகளில் வரும் திருமண வைபவம் போல தங்களின் திருமணமும் நடந்தேற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்.

தேவதைகளின் கதைகளில் வரும் திருமண வைபவம் போல தங்களின் திருமணமும் நடந்தேற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். அதற்காக வித்தியாசமான திருமண ஏற்பாடுகளுடன், வெகு விமரிசையாக திருமணத்தை நடத்துகிறார்கள்.

அதன் ஒரு அங்கமாக பல்வேறு இடங்களில், வித்தியாசமாக புகைப்படங்கள் எடுப்பது உலகம் முழுவதும் பரவலாக நடைமுறையில் இருக்கிறது. அப்படிதான் அமெரிக்காவின் நியு ஜெர்ஸியைச் சேர்ந்த சூ அலெக்ரெட்டா என்ற மணப்பெண்ணும், வித்தியாசமான புகைப்படங்கள் எடுப்பதற்காக, குதிரையில் ஏறியிருக் கிறார்.

அலெக்ரெட்டா வெள்ளை நிற மணப்பெண் உடையில் தயாராகியதால், அதற்கு பொருத்தமாக கருப்பு நிற குதிரை வரவழைக்கப்பட்டிருந்தது. மேலும் சாதாரண குதிரையை ‘யுனிகார்ன்’ எனப்படும் ஒற்றை கொம்பு உடைய தேவலோக குதிரையை போன்று அலங்கரித்திருந்தனர். போட்டோ சூட் எடுக்கும் இடம் தண்ணீர் நிரம்பிய குட்டையின் பின்னணியில் ரம்மியமான சூழலில் காட்சி தந்திருக்கிறது. மணப்பெண் குதிரையின் மீது ஏறி, புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அதை மண மகன் கீழே நின்றபடி ரசித்துக்கொண்டிருக்க, திடீரென குதிரை அலெக்ரெட்டாவை கீழே தள்ளிவிட்டு, கிளம்பி சென்றுவிட்டது. பாவம் மணப்பெண் தலைகுப்புற தண்ணீரில் விழுந்து விட்டார். கூடிநின்றவர்கள் அதிர்ந்து போனார்கள்.

‘‘என் திருமணம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்று நினைத்து, இப்படி ஒரு போட்டோ ஷூட்டிங்கை ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் குதிரை செய்த காரியத்தால், திருமண மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. நான் நினைத்தது போல என் வாழ் நாளில் இதை மறக்க முடியாது’’ என்கிறார் அலெக்ரெட்டா.

‘‘நல்லவேளை அலெக்ரெட்டாவுடன் நானும் குதிரையில் ஏறி இருந்தால், ஜோடியாக சேற்றில் குளித்திருப்போம். நான் தப்பித்துவிட்டேன்’’ என்று புன்னகைக் கிறார், மணமகன் அலெக்ஸ். இந்த சம்பவத்திற்கு பிறகு, நடக்க இருந்த விருந்து கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு, புதுமண ஜோடிகள் கிளம்பிவிட்டனர்.

Next Story