ஸ்பெயின் மங்கையின் மனதைத்தொட்டபோது..
வசந்தராஜ் சிங்கப்பூரில் என்ஜினீயரிங் படித்தவர். அடுத்து அவர் ஸ்பெயின் சென்று எம்.பி.ஏ. படித்தபோது, அந்த நாட்டை சேர்ந்த கார்லோஷ் என்ற மாணவர் அறிமுகமானார்.
வசந்தராஜ் சிங்கப்பூரில் என்ஜினீயரிங் படித்தவர். அடுத்து அவர் ஸ்பெயின் சென்று எம்.பி.ஏ. படித்தபோது, அந்த நாட்டை சேர்ந்த கார்லோஷ் என்ற மாணவர் அறிமுகமானார். அவருக்கு நிறைய தோழிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் பியத்திரிஸ். இவர் ஸ்பெயினில் எம்.எஸ்சி. படித்துள்ளார். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியையும் பெற்றுள்ளார். பியத்திரிசை, கார்லோஷ் வசந்தராஜீக்கு அறிமுகம் செய்துவைக்க, அப்போதே இருவரும் நண்பர்களாகிவிட்டார்கள். இரண்டு ஆண்டு களுக்கு பிறகு காதலித்தார்கள். பின்பு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம், வசந்தராஜின் சொந்த ஊரான விருத்தாசலத்தில் நடந்தது.
பியத்திரிஸ், மாமியார் குடும்பத்தோடு நெருக்கமாக பழகுகிறார். உற்றார் உறவினர்களோடு மனம்விட்டுப் பேசுகிறார். அந்த ஊரை சேர்ந்தவர்களிடம், ‘எப்படி இருக்கீங்க?’ என்று அன்பாக நலம் விசாரிக்கவும் ஆரம்பித்துவிட்டார். ஓரளவு தமிழும் பேசுகிறார்.
“ஸ்பெயின் தலைநகரான மேட்ரிட் நகரத்தில் நான் பிறந்தேன். எனது அப்பா மார்க்கஸ், அம்மா வெலாஸ்கோ. அப்பா இறைச்சியை பக்குவப்படுத்தி பாக்கெட்டில் அடைத்து வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். அம்மா வீட்டு நிர்வாகத்தை கவனிக் கிறார். நான்கு குழந்தைகளில் நான் மூத்த பெண். தம்பி சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக் கிறான். தங்கைகள் பள்ளியில் படிக்கிறார்கள். சிறுவயதில் இருந்தே நான் பைலட்டாக ஆசைப்பட்டேன். அதற்கான பயிற்சியை முடித்துவிட்டேன். முதலில் என் தந்தைக்கு உதவியாக அவரது தொழிலில் ஈடுபட்டேன். பின்பு ஆன்லைன் மூலம் துணிகள் விற்றேன்.
வசந்தராஜை சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். முதலில் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகினோம். ரொம்ப நாட்கள் பழக்கத்திற்கு பிறகு, அவர் என்னை காதலிப்பதாக சொன்னார். அவர் சொன்னதும் நான் காதலை ஏற்றுக்கொண்டேன். ஏன்என்றால் அவர் திறமைசாலி. மரியாதையானவர். வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்களை அவர் எனக்கு கற்றுத்தந்திருக்கிறார்.
முதலில் எங்கள் காதலை என் தந்தையிடம்தான் சொன்னேன். அவர் சற்று தயங்கினார். நான் முழுமையாக விளக்கிய பின்பு ஏற்றுக்கொண்டார். வசந்தராஜ் அவரது பெற்றோரிடம் எங்கள் காதலை சொன்னபோது அவர்களுக்கும் முதலில் சற்று தயக்கம் இருந்திருக்கிறது. பின்பு என்னை அழைத்து வரும்படி கூறியிருக்கிறார்கள். நானும் இங்கு வந்தேன். என்னிடம் என் மாமனார், மாமியார் எல்லாம் பேசினார்கள். அவர்களுக்கு என்னை பிடித்துவிட்டது. திருமணத்திற்கு சம்மதித்தார்கள். நல்லபடியாக எங்கள் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
தமிழர்களின் கலாசாரம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குவது என்னை உணர்வுபூர்வமாக ஈர்க்கிறது. நான் கிறிஸ்தவ பெண்ணாக இருந்தாலும் பகவத்கீதையும் படிப்பேன். அதில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்வியல் முறைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஸ்பெயின் கலாசாரம் இதில் இருந்து வித்தியாசமானது. எங்கள் நாட்டில் நாங்கள் படித்து முடித்தவுடன் எங்களுடைய வாழ்க்கையை தாங்களே தேர்வு செய்து தனியாக சென்று விடுவோம். ஆனால் தமிழ் கலாசாரத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார்கள்.
இந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை எனக்கு பிடித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் பெற்றோரை ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை தான் சந்திப்போம். அதாவது பண்டிகை காலங்களில் மட்டும் சந்தித்து பேசுவோம். ஆனால் இங்கு தாய், தந்தை, அத்தை, மாமா, பாட்டி, தாத்தா, பேரக்குழந்தைகள் என கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார்கள். எனக்கும் இந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை பிடித்துள்ளது. என்னுடைய கணவரின் தாத்தா வீடான மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்துக்கு சென்றோம். அந்த கிராமம் வயல்வெளிக்கு இடையே இயற்கையோடு ஒன்றிணைந்து அழகாக இருந்தது.
தமிழ்நாட்டு உணவுகளும் எனக்கு பிடித்திருக்கிறது. இங்குள்ள சிக்கன் பிரியாணி ரொம்ப பிடிக்கும். பாயசமும் பிடிக்கும். இட்லி, தோசை, தக்காளி சட்னி, சாம்பார் போன்றவைகளையும் விரும்பி சாப்பிடுவேன். இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவைகளை நானே சமைத்து விடுவேன். அவைகளை சமைக்க என் கணவர்தான் எனக்கு கற்றுக்கொடுத்தார்” என்று கூறும் பியத்திரிஸ் பட்டுப்புடவை கட்டி மங்களகரமான தமிழ் மங்கையாக வலம் வருகிறார்.
“புடவை எனக்கு புது அழகு தருகிறது. மாமியார்தான் எனக்கு புடவைகட்ட கற்றுத்தந்தார். நான் ஸ்பெயினில் ஆன்லைனில் துணிகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன். நானே ஆடைகளை வடிவமைக்கவும் செய் கிறேன். இனி தமிழகத்தில் பிரபலமான உடை களையும் ஸ்பெயினில் விற்பனை செய்வேன்” என்கிறார், பியத்திரிஸ் வசந்தராஜ்.

Related Tags :
Next Story