காங்கேயம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சை தற்கொலைக்கு தூண்டியதாக டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தர்ணா
நர்சை தற்கொலைக்கு தூண்டியதாக 2 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி காங்கேயம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நர்சின் உறவினர்கள், அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
காங்கேயம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா நரிமேடு அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகள் மணிமாலா (வயது 25). திருமணமாகவில்லை. இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள அரசு குடியிருப்பில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிமாலா தான் தங்கி இருக்கும் குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் விரைந்து சென்று, மணிமாலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மணிமாலா தற்கொலை செய்து கொண்டது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணிமாலாவின் பெற்றோரும், உறவினர்களும் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மணிமாலாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையில் மணிமாலாவுடன் வேலை பார்க்கும் மற்ற நர்சுகளும் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது 2 டாக்டர்கள் தூண்டுதலின் பேரில்தான் மணிமாலா தற்கொலை செய்து கொண்டார், எனவே மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய இந்த 2 டாக்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று மணிமாலாவின் தந்தை ராமலிங்கம் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மணிமாலாவின் பெற்றோர், உறவினர்கள் நர்சுகள், அரசு ஊழியர்கள் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய 2 டாக்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தால்தான், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மணிமாலாவின் உடலை பெற்றுக்கொள்வோம் என்றனர். இதையடுத்து காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் சமசர பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மணிமாலாவின் தந்தை ராமலிங்கம் கூறியதாவது:-
கடந்த 8-ந்தேதி வெள்ளகோவில் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளைத்தில் மருத்துவமுகாம் நடந்துள்ளது. அந்த முகாமில் ஒரு பெண் டாக்டர், மணிமாலா மற்றும் ஒரு டிரைவர், ஒரு மருந்தாளுனர் ஆகியோருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த முகாமிற்கு பெண் டாக்டர் போகவில்லை. ஆனால் மற்ற அனைவரும் முகாமிற்கு சென்றனர். முகாமிற்கு பெண் டாக்டர் போகாத தகவல் சம்பந்தப்பட்ட டாக்டருக்கு தெரியவந்தது. இந்த தகவலை ஏன்? என்னிடம் தெரிவிக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட டாக்டர், நர்சு மணிமாலாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் நான் கலந்து கொண்டேன், அந்த பெண் டாக்டர் வராதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது மணிமாலாவை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட டாக்டர் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் 3 நாட்களுக்குள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நோட்டீசு கொடுதார். இதற்கிடையில் முகாமிற்கு போகாத பெண் டாக்டரும் மணிமாலாவை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மணிமாலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே இந்த 2 டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story