பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி திருப்பூரில் கைது
சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி முருகன் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.
திருப்பூர்,
சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி முருகன் (வயது 49). இவர் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். இவர் மீது அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கு சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனால் இவரை அபிராமபுரம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடந்தது. இந்த நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் முருகன் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து திருப்பூருக்கு விரைந்து வந்த சென்னை போலீசார் முருகம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் மறைந்திருந்த ரவுடி முருகனை சுற்றி வளைத்து கைதுசெய்தனர். ஏற்கனவே சென்னை மாங்காடு அருகே ஒரே இடத்தில் ரவுடிகள் 76 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது சில ரவுடிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களுக்கும், இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story