திருநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 62 பேர் காயம்
இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 62 பேர் காயமடைந்தனர்.
அன்னவாசல்,
தமிழகத்தில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்த படியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா திருநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இதனை காண்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு திருநல்லூரில் நேற்று நடைபெற்றது. முன்னதாக வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்களுக்கான இடம், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கான இடம், காளைகள் வெளியேறும் பகுதியின் இருபுறங்களிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேற்று முன்தினம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 656 காளைகளும், 257 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மாடுகளை கால்நடை மருத்துவ குழுவினரும், மாடு பிடி வீரர்களை மருத்துவ குழுவினரும் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.
பின்னர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் பெரும் பாலான காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசின. சில காளைகள் அவர்களை காலால் மிதித்தன. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 4 பேர், பார்வையாளர்கள் ஏழுமலை, பாலசுப்பிரமணியம், அய்யப்பன், கோவிந்தராசு, ரவி உள்பட 62 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகே தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இவர்களில் 31 பேர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர், விராலிமலை, திருச்சி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டையொட்டி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையிலும், இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன் முன்னிலையிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டை திருநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் சரக்கு ஆட்டோ, டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்து கண்டு ரசித்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, மணப்பாறை, விராலிமலை, புதுக்கோட்டை, இலுப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து திருநல்லூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Tags :
Next Story