ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரேஷன் கடைகளில் எம்.எல்.ஏ. ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தட்டான்குளம்பட்டியில் உள்ள ரேஷன் கடைகளில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வத்திராயிருப்பு ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமமக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை சந்திரபிரபா எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஸ்வரி, சேது, அக்கனாபுரம் ராஜா, கலுசலிங்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலர் சிம்சன், கிளை பிரதிநிதி மணி, கணேசன், கான்டிராக்டர் அயூப்கான் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தட்டான்குளம்பட்டியில் உள்ள ரேஷன் கடைகளில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் வினியோகிக்கும் முறை, பொருட்களின் தரம், எடை குறித்து கேட்டறிந்தார். மேலும் கடை பொறுப்பாளர்களிடம் பொதுமக்களுக்கு வினியோகிக்கும் பொருட்களில் எந்த குறைபாடும் இருக்க கூடாது, எந்தவித புகாரும் வரக்கூடாது என்றும், சரியான முறையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் கூறினார். பின்னர் ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியம், கருமாரிமுருகன், கந்தசாமி, ராமர், வக்கீல்ராஜா, தங்கமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story