வாகன சோதனை என்ற பெயரில் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
வாகன சோதனை என்ற பெயரில் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவுக்கு 19 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அனைத்து வாகனங்களும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு அதன் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக்கூடாது. தேவையில்லாமல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யக்கூடாது. காவல்துறைக்கு மரியாதை ஏற்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடு இருக்க வேண்டும். மக்களோடு மக்களாக பழகி காவல்துறைக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்.
வாகன சோதனை என்ற பெயரில் எக்காரணத்தை கொண்டும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்க கூடாது. அனைவரும் மனசாட்சிக்கு பயந்து பணியாற்ற வேண்டும். உங்கள் முன்பு கேமரா இருக்கிறது போன்று நினைத்து பணியாற்ற வேண்டும். அதையும் மீறி பணம் வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏதேனும் சாலை விபத்து நடந்தால் 108 ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் பட்சத்தில் அதை எதிர்பார்க்காமல் உயிருக்கு போராடுபவர்களை உங்களுடைய வாகனங்களிலேயே ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும். முதலில் உயிரை காப்பாற்ற வேண்டும். அதன்பின் எவ்வாறு விபத்து நடந்தது, விபத்திற்கு யார் காரணம் என விசாரணை நடத்துங்கள். இதுதான் காவல்துறையினரின் கடமை. நமது குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது விபத்தில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வோமோ அதுபோன்று மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளுங்கள். இது உங்களுக்கு புண்ணியமாக வந்துசேரும். அதுபோல் எங்கு விபத்து நடந்தாலும் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story