ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும்; அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும்; அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 Feb 2018 3:00 AM IST (Updated: 12 Feb 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கவுந்தப்பாடியில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவுந்தப்பாடி,

ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனை கூட்டம் கவுந்தப்பாடியில் உள்ள கவின்மஹால் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், புறநகர் மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை வழங்கி ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஏழை- எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதல்- அமைச்சராக பதவி ஏற்று ஓராண்டாவதையொட்டி அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்வது.

இரட்டை இலை சின்னத்தை பெற்று தந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்வது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடியதற்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்வது. மகளிருக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்வது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீழ்பவானி பாசனத்திட்டத்தில் முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இதில் திருப்பூர் சத்தியபாமா எம்.பி., ஈஸ்வரன் எம்.எல்.ஏ., சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி.க்கள் கே.கே.காளியப்பன், என்.ஆர்.கோவிந்தராஜர் வி.கே.சின்னசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பழனிச்சாமி, கே.சி.பொன்னுதுரை, எஸ்.ஆர்.கிருஷ்ணன், பி.சிதம்பரம், பவானி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.தங்கவேல், புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான், கவுந்தப்பாடி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் பாவா தங்கமணி, எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் பழனிச்சாமி, சரவணன், உஷா மாரியப்பன், காட்டுவலசு கிளைச்செயலாளர் கணேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பவானி நகர அ.தி.மு.க. செயலாளர் என்.கிருஷ்ணராஜ் வரவேற்று பேசினார். முடிவில் கிளை செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார். 

Next Story