சின்னமனூர் அருகே கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 42 பேர் காயம்
சின்னமனூர் அருகே கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 42 பேர் காயம் அடைந்தனர்.
சின்னமனூர்,
சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் ஏழைகாத்தம்மன் ஸ்ரீ வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டை காலை 8.30 மணிக்கு துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க 450 மாடுபிடி வீரர்கள் எடை, உயரம், பார்வை, காயங்கள் போன்ற மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் வாடிவாசல் திறந்து முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து தேனி, மதுரை, திண்டுக்கல், அலங்காநல்லூர், சிவகங்கை, விருதுநகர், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் 600 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து வந்தன.
இந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனால் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் துள்ளிக்குதித்து பாய்ந்து சென்றது. சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, எவர்சில்வர் பாத்திரம், தங்ககாசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 42 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அழங்காநல்லூர் அஜித் (வயது 19), வீரமணி (24), மதுரை முத்துராமர் (21), மணிகண்டன் (31) ஆகிய 4 பேரையும் தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்கள், சிறுவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். ஜல்லிக்கட்டில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 600–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் வெங்கடாசலம் ஆய்வு செய்தார். விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story