கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்றம்: 1,053 வழக்குகளுக்கு சமரச தீர்வு


கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்றம்: 1,053 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 12 Feb 2018 4:00 AM IST (Updated: 12 Feb 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,053 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கினார். மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அறிவொளி வரவேற்று பேசினார். விரைவு மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி அன்புசெல்வி, சிறப்பு சார்பு நீதிபதி லீலா, கூடுதல் சார்பு நீதிபதி சசிகலா, நீதித்துறை நடுவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பேசினர்.

இதையொட்டி வங்கிகள், சிறு குற்றங்கள், காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, சிவில் உள்ளிட்ட 1,053 வழக்குகளுக்கு ரூ. 5 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 461 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.

3 வழக்குகள்

மேலும் மோட்டார் வாகன விபத்துகளில் 3 வழக்குகளில் ரூ. 1 கோடியே 56 லட்சத்து 75 ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. இதில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள், காப்பீட்டு நிறுவன மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தஸ்னீம் நன்றி கூறினார். 

Next Story