தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடு கிடைக்க வாய்ப்பு
மராட்டியத்தில் நடைபெற உள்ள தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை,
மராட்டியத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க தொழில் முதலீட்டாளர் மாநாடு வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த அழைப்பை ஏற்று இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக உள்நாட்டை சேர்ந்த முகேஷ் அம்பானி மற்றும் ஆனந்த் மகேந்திரா ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
அவர்கள் மராட்டியத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.
இந்த மாநாடு குறித்து மராட்டிய மாநில அரசின் தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுனில் போவெல் கூறியதாவது:-
தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் மராட்டியத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கு புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புகிறோம். குறிப்பாக கட்டுமான துறையில் ரூ.3½ லட்சம் கோடியும், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்கு ரூ.1¼ லட்சம் கோடியும், விவசாயத்துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடியும், சுற்றலாத்துறைக்கு ரூ.4 ஆயிரம் கோடியும் முதலீடு கிடைக்கும் என்று அரசு எதிர்ப்பார்க்கிறது.
மேலும் ஆட்டோமொபைல்ஸ், சிமெண்ட், உரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகள் போன்றவற்றிலும் முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story