கயத்தாறு அருகே தாய் இறந்த துக்கத்தில் தச்சு தொழிலாளி தற்கொலை


கயத்தாறு அருகே தாய் இறந்த துக்கத்தில் தச்சு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2018 5:06 AM IST (Updated: 12 Feb 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே தாய் இறந்த துக்கத்தில் தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மருதையா. இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுடைய மகன் முத்துராஜ் (வயது 28). இவர் தச்சு தொழில் செய்து வந்தார்.

காமாட்சி உடல் நலக்குறைவால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முத்துராஜ் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் முத்துராஜ் ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட முத்துராஜுக்கு செல்வி என்ற மனைவியும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். தாய் இறந்த துக்கத்தில் தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story