மண்டபம் அருகே மீன் ஏற்றி வந்த வேன் கடைக்குள் புகுந்து 2 பெண்கள் உடல் நசுங்கி பலி


மண்டபம் அருகே மீன் ஏற்றி வந்த வேன் கடைக்குள் புகுந்து 2 பெண்கள் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 13 Feb 2018 3:30 AM IST (Updated: 13 Feb 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் அருகே மீன் ஏற்றி வந்த வேன் கடைக்குள் புகுந்து 2 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பனைக்குளம்,

மண்டபம் ஐ.என்.டி.காலனியை சேர்ந்தவர் மலைராஜன். இவர் தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வழக்கமாக முறுக்கு சப்ளை செய்ய உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகரை சேர்ந்த செல்லம்மாள்(வயது 55) என்பவர் வந்துள்ளார்.

அவரும் வளர்மதி(55) என்பவரும் கடை முன்பாக பேசிக்கொண்டிருந்தனராம். மலைராஜன் வீட்டுக்குள் சென்றிருந்தார். அப்போது மண்டபம் கோவில்வாடி கடற்கரையில் இருந்து மீன் ஏற்றி வந்த வேன் திடீரென நிலைதடுமாறி அந்த பெட்டிக்கடைக்குள் புகுந்தது. இதில் அங்கு பேசிக்கொண்டிருந்த செல்லம்மாள், வளர்மதி ஆகியோர் மீது வேன் மோதியதில் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கடை சேதமடைந்தது.

வேன் டிரைவர் உடனடியாக வேனை பின்னோக்கி எடுத்து வேகமாக தப்பிச்சென்று விட்டார். தகவல் அறிந்ததும் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் விபத்துக்கு காரணமான வேனை பிரப்பன்வலசை அருகே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பிச்சென்றிருப்பதும், அந்த வேன் ராமேசுவரம் பகுதியை சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. 

Related Tags :
Next Story